சீறிக்கொண்டு எகிறிவந்த பாம்பு! அசால்ட்டாக பிடித்து அடக்கிவைத்த சிங்கப்பெண்! மிரளவைக்கும் வீடியோ!!Girl catch big snake video viral

பாம்பு என்றால் படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய வீராதி வீரர்களாக இருந்தாலும் சிறு பாம்பை கண்டால் சிறு நடுக்கம் ஏற்பட தான் செய்கிறது. இது ஒருபுறமிருந்தாலும் வினோதமான சில மக்கள் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை வளர்ப்பது, அதனைப் பிடித்து தோள்களில் போட்டுகொள்வது போன்ற வித்தியாசமான செயல்களால் பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

மேலும் பாம்புகள் குறித்த வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்நிலையில் தற்போது இளம்பெண் ஒருவர் சீறி கொண்டு படம் எடுத்த பாம்பை அச்சமின்றி லாவகமாக பிடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் சாலையோரத்தில் சென்று கொண்டு இருந்த பெரிய பாம்பை இளம்பெண் ஒருவர் சிறிதும் அச்சமின்றி, எந்தவித பாதுகாப்புமின்றி மிகவும் அசால்டாக பிடித்துள்ளார். அந்த பாம்பு சீறிக் கொண்டு எகிறிய நிலையில் முதலில் அவர் தலைக்கு கீழ் கழுத்தை பிடித்து, கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். பின்னர் தீவிர முயற்சிக்கு பின் பாம்பை அடக்கி கட்டுக்குள் கொண்டு வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.