இந்தியா வீடியோ

கோவிலுக்குள் நுழைந்து பூசாரியை நிர்வாணமாக அடித்து உதைத்த பெண்கள்!! வெளியான பகீர் காரணம்! தீயாய் பரவும் சிசிடிவி வீடியோ!!

Summary:

girl attack poosari for misnehaviour with girl

கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம்  கோவில் பூசாரி தவறாக நடந்து கொண்டதாக பெண்கள் பலர் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் பவானிபுரத்தில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் நபர், கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

 இந்நிலையில் இது குறித்து அறிந்த பெண்கள் சிலர் ஒன்றாக கோவிலுக்குள் நுழைந்து பூசாரி மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மிளகாய்பொடியை அவர்மீது வீசி அவரது துணிகளை கிழித்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும்  இந்நிலையில் இதுகுறித்த சிசிடிவி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் கோவில் பூசாரி இப்படியா செய்வது என மோசமாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.


Advertisement