#Breaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுடெல்லியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். தற்போது 72 வயதாகும் சீதாராம், அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதனிடையே, தீவிர உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட யெச்சூரி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது
யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கட்சித்தொடர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: ஆப்ரிக்கா சென்று வந்த இந்தியருக்கு எம்.பாக்ஸ் உறுதி; மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் யெச்சூரியை நேரில் சென்று சந்தித்து, மருத்துவர்களிடம் அவரின் உடலநலம் குறித்து கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: வயலுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் லாரி; விபரீதம் புரியாமல் பெட்ரோலை பிடிக்க முண்டியடித்த மக்கள்.!