இந்தியா

அதிரடியாக விலை குறைந்த கேஸ் சிலிண்டர்! இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை!

Summary:

Gas cylinder rate reduced

பெட்ரோல், டீசல், கேஸ் என அனைத்தும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கர உச்சத்தை தொட்டது. ஆனால், சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் கேஸ் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 120.50 குறைக்கப்பட்டுள்ளது.

இது இந்த மாதத்தில் இரண்டாவது முறை விலை குறைப்பாகவும். எண்ணெய் சந்தையில் விலை குறைந்துள்ளதை அடுத்து தற்போது கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 494.99 ஆக இருக்கும். தற்போது இது ரூ. 500.90 ஆக உள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் அதிரடியாக விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement