இந்தியா

திடீரென அதிகரித்த சமையல் சிலிண்டர் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Summary:

gas cylinder price increased

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ‌ஜனவரி மாதத்தில் இருந்து 20 ரூபாய் அதிகரித்துள்ளது.

மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இதற்கு முன்னதாக  714 ரூபாய் என விலை இருந்துவந்தது. தற்போது 20 ரூபாய் உயர்ந்து 734 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை உள்ள சிலிண்டரின் விலை வழக்கமானதை விட 20 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில், ஜெட் எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணைய் விலை உயர்வே காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. தொடர்ந்து 5-ஆவது மாதமாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement