இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? பரபரப்பு பதிலை அளித்த சவுரவ் கங்குலி!

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? பரபரப்பு பதிலை அளித்த சவுரவ் கங்குலி!


ganguly talk about india pakistan match


இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் கேட்க வேண்டும் என கங்குலி பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்புக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். வரும் 23ஆம் தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ நிர்வாகிகள் கூட்டத்தில், சவுரவ் கங்குலி தலைவர் பதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ganguly

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கங்குலியிடம், 'நீங்கள் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றபின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பிரச்னை கேட்டுள்ளனர் இதற்க்கு பதிலளித்த கங்குலி, 'இந்த விவகாரம் என் கையில் இல்லை.  இந்தக் கேள்வியை பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் கேட்க வேண்டும்.

கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்கள் அரசாங்கத்துடன்  தொடர்புடையவை. இதில் இரண்டு நாட்டு அரசாங்கமும் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.