பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் குழந்தைகளுக்கு அடைக்கலம் - கௌதம் காம்பீர் அசத்தல்!

பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் குழந்தைகளுக்கு அடைக்கலம் - கௌதம் காம்பீர் அசத்தல்!



gambhir-helps-children-of-sex-workers

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் கௌதம் காம்பீர் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் குழந்தைகளின் படிப்பு மற்றும் தங்கும் வசதிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.

பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் பெண் குழந்தைகளும் வளர்ந்த பிறகு அதே தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம் சமுதாயத்தில் அவர்களுக்கான மதிப்பு மிகவும் குறைவு.

gautam gambhir

இதனால் பள்ளிகளில் சேரந்து படிக்கவும் வேறு நிறவனங்களுக்கு வேலைக்கு செல்வதையும் ஒரு மன நெருடலுடன் செய்கின்றனர். தற்போது இவர்களின் நலனுக்காக கௌதம் காம்பீர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தற்போது பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் 25 குழந்தைகளை அவர் தனது சொந்த செலவில் தங்கும் வசதியும் படிப்பு வசதியும் ஏற்பாடு செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதே போல் பலரும் முன்வந்து இவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.