இந்தியா உலகம்

சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம்!

Summary:

full freedom for army

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி தாக்கியதில் சுமார் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அத்துடன்,
மேலும், கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களுடைய பகுதி என சீனா கூறிவருகிறது.

இந்தநிலையில், லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை ரஷியா செல்லவுள்ள நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். 

இதனையடுத்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத், எல்லையில் இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என் தெரிவித்தார்.


Advertisement