உயிருடன் இருக்கும் விஷப்பாம்பை ரசித்து ருசித்து உண்ணும் தவளை.. வைரல் வீடியோ காட்சிfrog-swallow-snake-viral-video

தவளை ஒன்று பாம்பினை உயிருடன் விழுங்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பொதுவாக பாம்புகள்தான் தவளையை விழுங்கும் எனவும், தவளைகள் பூச்சிகளை விழுங்கும் எனவும் உணவு சங்கிலி குறித்து நாம் படித்து இருப்போம். ஆனால் அதற்கு நேர்மாறாக தவளை ஒன்று பாம்பினை விழுங்கும் அதிர்ச்சி வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு ஒன்றில்தான் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. சுமார் 25 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சியில் பச்சை தவளை ஒன்று பெரிய பாம்பு ஒன்றினை உயிருடன் விழுங்குகிறது.

பாம்பின் தலைமுதல் அதன் பாதி உடல் தவளையின் வாய்க்குள் சென்றுவிட்டநிலையில் மீதி இருக்கும் பாம்பின் உடலை தனது வாய்க்குள் தள்ளுகிறது தவளை. இந்த காட்சியை மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கும் இணையவாசிகள், தவளைக்கு என்ன அவளோ பெரிய வயிறு இருக்கா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.

காடுகளில் உணவு சங்கிலி முறையில் இவை எல்லாம் சாத்தியம் என்ற தலைப்புடன் சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி...