திருமணமாகாத ராகுல்காந்தி ஏன் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார்.? சர்ச்சையை கிளப்பிய முன்னாள் எம்.பி.!

திருமணமாகாத ராகுல்காந்தி ஏன் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார்.? சர்ச்சையை கிளப்பிய முன்னாள் எம்.பி.!


former-mp-talk-about-rahul-gandhi

தமிழகத்தை போலவே கேரளாவிலும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளாவில் தற்போது ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
 
இந்த நிலையில் இடுக்கி மாவட்டம் இரட்டையார் பகுதியில் மின்துறை அமைச்சர் மாணிக்கு ஆதரவாக இடுக்கி முன்னாள் எம்.பி.யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ராகுல் காந்தி ஏன் பெண்கள் படிக்கும் கல்லூரிகளுக்கு மட்டுமே சென்று பேசுகிறார்? பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்று கொடுக்கிறேன் என்று கூறி பெண்களை குனிந்தும் வளைந்தும் நிற்கச் சொல்கிறார்.

rahul gandhi
 பெண்கள் அருகே ராகுல் காந்தி செல்லக்கூடாது. ராகுல் காந்தியுடன் பேசும்போது பெண்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி திருமணமாகாதவர், சிக்கலை உருவாக்கக்கூடியவர் என்று பேசியுள்ளார். இதற்கு கேரள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன் ’ஜார்ஜ் ஜார்ஜ் கூறியது அவரது சொந்த கருத்து என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து அல்ல என்று கூறினார்.