இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் அலட்சியம்! பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு இளைஞன்! அம்பலமான உண்மை!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய அபிமன்யு என்ற இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. இப்படி இருந்தால் எப்படி? இதனால் இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல நேரிடலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இதனை பிரதமர் மோடி மற்றும் அகமதாபாத் விமான நிலைய ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்திருந்தார்.
Mr Abhimanyu
— APD Ahmedabad (@aaisvpiairport) March 21, 2020
CCTV footage for your Infrared thermal scan at Ahmedabad airport pic.twitter.com/mkTydQqz5d
ஆனால் அந்த இளைஞருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் பொய் கூறியுள்ளார். இந்நிலையில் அகமதாபாத் விமான நிலையம் அந்த இளைஞருக்கு பரிசோதனை மேற்கொண்ட வீடியோவை அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பலரும் விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்களது உயிரை பணையம் வைத்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தயவுசெய்து இதுபோன்ற பீதியை பரப்பவேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இளைஞர் அபிமன்யு என்னை மன்னித்து விடுங்கள். நான் எனக்கு செய்யப்பட்ட பரிசோதனையை கண் பரிசோதனை என நினைத்து விட்டேன் என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்.
Guy was probably trying to pull off an anti-government stunt.
— Pratyasha Rath (@pratyasharath) March 21, 2020
Got caught red handed.
But the best part was he clarified saying that he thought it was an eye scan
😂😂😂
Unless you are returning from another galaxy, it's not possible you don't know what is going on in airports pic.twitter.com/B8Y9IlCsWr