வௌவால் கழிவுகள்..! 3 பேர் அப்போதே பலி.. 8 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொரோனா வைரஸ் மூடி மறைத்த சீனா.?

வௌவால் கழிவுகள்..! 3 பேர் அப்போதே பலி.. 8 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொரோனா வைரஸ் மூடி மறைத்த சீனா.?


First corona cases may found 8 years before in China research says

தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா என்ற இந்த கொடிய வைரஸ் 8 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் தோன்றியிருக்கலாம் எனவும், சீனா அனைத்தையும் மூடி மறைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகா இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா வைரஸால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

corona

உலகளவில் இதுவரை 7.72 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்னரே, அதவாது கடந்த 2012 ஆம் ஆண்டே கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  அந்நாட்டில் உள்ள சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்த 6 பேர் வௌவால்களின் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பணி முடிந்த பிறகு அதில் மூன்று பேர் நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய மற்ற அறிகுறிகளுடன் இறந்தும் போனார்கள்.

corona

இறந்தவர்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இரண்டு நிபுணர்கள் அந்த சம்பவம் கொரோனா தாக்கத்தின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் 2012-ல் இறந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பெருந்தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதை நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.