இந்தியா

ஜாமீனில் வெளியான குற்றவாளி! உயிருடன் எரிக்கப்பட்ட 23 வயது இளம்பெண்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Fire 23 years old young girl

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் இரண்டு மர்ம ஆசாமியால் பாலியல் வன்முறைக்கு ஆளானார். அதனை அடுத்து அந்த பெண் தைரியமாக போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதன் பிறகு அந்த பெண் நிம்மதி அடைந்துள்ளார். ஆனால் சில நாட்கள் சிறையில் இருந்து குற்றவாளிகள் சமீபத்தில் ஜாமீன் மூலம் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த அவர்கள் தங்களது நண்பர் மூவரை உடன் அழைத்து சென்று அந்த பெண்ணை அதிகாலை 4 மணியளவில் கடத்தி வந்துள்ளனர்.

அதன் பிறகு தனிமையான ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அந்த இளம்பெண்ணை உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடந்தியதில் நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement