மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்.! மாப்பிள்ளையை விருந்து அழைத்து மாமனார் செய்த கொடூரம்.!

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்.! மாப்பிள்ளையை விருந்து அழைத்து மாமனார் செய்த கொடூரம்.!


father killed his son in law

தெலுங்கானா மாநிலம் போடலகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நாராயண ரெட்டி என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ரவாளி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது  காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரிய வந்தநிலையில் அவர்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட பல்வேறு காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு நாராயண ரெட்டியும், ரவாளியும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் தந்தை வெங்கடேஸ்வர ரெட்டி உறவினர்களுடன் சேர்ந்து தங்கள் மகளை வலுக்கட்டாயமாக தங்களுடன் கூட்டி சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த மகளை அறையில் அடைத்து வைத்து கணவருடன் செல்போனில், பேசக்கூடாது, நேரில் பார்க்க கூடாது என கூறினார்.

மேலும் ரவாளிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்தனர். இதற்கு ரவாளி சம்மதிக்கவில்லை. தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பது குறித்து கணவருக்கு தகவல் தெரிவித்தார்.  இந்தநிலையில் வெங்கடேஷ்வர ரெட்டி, தனது உறவினர்களுடன் சேர்ந்து  நாராயண ரெட்டியை சமரசம் பேச அழைத்து மது விருந்து வைத்துள்ளார். அதன் பின்னர் நாராயண ரெட்டியின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு அருகே உள்ள காட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு உறவினர்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நாராயண ரெட்டியை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது நல்லுரு கிராமத்தின் புறநகர் பகுதியில் நாராயண ரெட்டியின் உடலை கைப்பற்றினர். பின்னர் வெங்கடேஸ்வர ரெட்டி மற்றும் அவரது உறவினர்களை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த மகளின் கணவனை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.