திடீரென வந்த போன்கால்! அலறியடித்து ஓடிய உறவினர் வீட்டிற்குள் கண்ட அதிர்ச்சி காட்சி! வெளியான பகீர் பின்னணி!

திடீரென வந்த போன்கால்! அலறியடித்து ஓடிய உறவினர் வீட்டிற்குள் கண்ட அதிர்ச்சி காட்சி! வெளியான பகீர் பின்னணி!


father-killed-2-children-and-commits-suicide-for-depres

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் அமோல் ஜக்தீப். 37 வயது நிறைந்த இவரது மனைவி மயூரி. இவர்களுக்கு ஆதித்யா, ஆயுஷ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஓட்டல் நடத்திவந்த அமோல், அதிகளவில் கடன் வாங்கி, அதை திருப்பி கொடுக்கமுடியாமல் பெருமளவில் சிரமப்பட்டு வந்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரது ஓட்டல் தொழில் பெருமளவில் பாதிக்கபட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மிகுந்த மனஅழுத்தத்தில் சிரமப்பட்டு வந்த அமோல் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, இதுகுறித்து தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார்.

suicide

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு விரைந்தபோது, அங்கு அமோலும் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த  சம்பவம் குறித்து போலீசாருக்கு  தகவலளிக்கபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..