பெற்ற மகளை பல வருடங்களாக சீரழித்துவந்த தந்தை!. இறுதியில் நேர்ந்த கொடூரம்!.



father-abused-his-daughter


மேற்கு வங்கத்தில் சுக்ரா என்பவர் மனைவியை பிரிந்து அவரது 13 வயதான மகளுடன் வசித்து வந்தார். இவர் தான் பெற்ற மகள் என்று கூட பாராமல் கடந்த இரண்டாண்டுகளாக சிறுமியை தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 9-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி, தன் தந்தை தினந்தோறும்  சீரழித்து வருவதால் விரக்தியடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடம் கூறவிருப்பதாக சுக்ராவிடம் எச்சரித்துள்ளார்.

இதனால் பயந்து போன சுக்ரா தனது மகளை கொலை செய்து அவரின் வீட்டின் பின்புறம்  புதைத்துள்ளார். உறவினர்களிடம் இதனை மறைப்பதற்காக, தனது மகள் தற்கொலை செய்து கொண்டார், அதனால் அவர் சடலத்தை புதைத்துவிட்டேன் என கூறினார்.

         sexual abuse

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சக்ரா செய்த கொடுமைகள் தெரியவந்தது. இதனையடுத்து சுக்ராவை காவல்துறையினர் கைது செய்தனர்.  13 வயது மகளை இரண்டாண்டுகள் சீரழித்துவிட்டு பின்னர் கொன்று புதைத்த தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.