இனிமேல் வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம் அவசியம்.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

இனிமேல் வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம் அவசியம்.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!


fastag must for after jnuary

வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அங்கு வாகனங்கள் வரிசையில் சிறிது நேரம் நின்ற பிறகு தான் செல்லமுடியும். அதற்கு காரணம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் தான். இந்தநிலையில் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் என்ற மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் பாஸ்டேக் மூலம் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.

car

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் சுங்க சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் இனி வழக்கமான முறையில் பணத்தை கொடுத்து சில்லரைக்காகவோ, அல்லது பண பரிமாற்றத்துக்காகவோ வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க தேவை இல்லை.