இந்தியா வேளாண்மை

விவசாயிகளுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது!. பிறர் உண்பதற்காக விவசாயியின் மரண வலி!.

Summary:

விவசாயிகளுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது!. பிறர் உண்பதற்காக விவசாயியின் மரண வலி!.

கர்நாடகாவில் நெலமங்களா அருகே உள்ள சிவகங்கே மலைப்பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் தனது மனைவி மகனுடன் வசித்துவந்தார்.
இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால், வட்டிக்கு கடன் வாங்கி ஆனந்த் நிலத்தை உழும் பணியை செய்து வந்தார்.

ஆனால், அவரிடம் பணம் ஏதும் இல்லாததால் நிலத்தை உழுவதற்கு மாடோ, டிராக்டரோ வாங்க இயலவில்லை. இதனால் விதைகளை விதைப்பதற்கு ஏரின் ஒரு புறத்தில் தனது மனைவியையும், மறு புறத்தில் மகனையும் பூட்டி நிலத்தை உழும்  நிலைக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் கூறுகையில் 8 முதல் 10 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தரும் அளவிற்கு, 2 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. 

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். பணம் இல்லாததால் குடும்பத்தை இத்தொழிலியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உள்ளது என மன குமுறலுடன் கூறினார்.


Advertisement