அரசியல் இந்தியா TN Election 2021

வருகின்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி.!

Summary:

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டி

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் தீனா, சமஸ்தானம், ஐ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சுரேஷ்கோபிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement