120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலி சாமியார்!. அம்பலமாகும் உண்மைகள்!.fake priest raped and Bully120 womens in temple

ஹரியானா மாநிலம் பதேஹேபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபா அமர்புரி என்கிற பில்லுராம். இவர் தொஹானா பகுதியில் உள்ள பாபா பாலக்நாத் கோயிலில் தலைமை அர்ச்சகராக இருக்கிறார். மேலும், அவரை ஆன்மிக குரு என்று கூறிக் கொண்டுள்ளார். இந்நிலையில், இவரிடம் உடல்நலப் பாதிப்பு உள்ளதாக கூறி ஆசி பெற வந்த பெண்களை, சிறப்பு பூஜைகள் செய்கிறேன் எனக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதனை வீடியோவாகவும் எடுத்து மிரட்டி வந்துள்ளார்.

raped

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தொஹானா பொலிசார் பாபா அமர்புரியின் ஆசிரமத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான ஸ்டோரேஜ் டிவைஸ் மற்றும் செல்போன்கள்  கைப்பற்றப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்தபோது, பாபா 120க்கும் அதிகமான பெண்களை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்திருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், பாபா அமர்புரியை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

raped

இதற்கு முன்பும், கடந்த 2017ஆம் ஆண்டு பெண்ணொருவர் அளித்த புகாரின் பேரில் பாபா அமர்புரி கைது செய்யப்பட்டார். ஆனால், பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.

இதுதொடர்பாக தொஹானா பொலிசார் கூறுகையில், ‘பாபா அமர்புரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் , பென்ட்ரைவ் -களில் 120 வெவ்வேறு பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கின்றன.

raped

இந்தப் பெண்களை பாபா அமர்புரி பலாத்காரம் செய்து மிரட்டி இருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பேர் தாமாக முன் வந்து புகார் அளித்துள்ளனர். அவர்கள் சாட்சி கூறவும் முன் வந்துள்ளனர். பாபா அமர்புரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும்போது, என்னென்ன குற்றங்கள் செய்துள்ளார் என்பது வெளிவரும்’ என தெரிவித்துள்ளனர்.