
Facebook and google.interested in india to invest
இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் 75 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இந்தியாவின் பெரிய நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் சமீபத்தில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் அதிகப்படியான இணைய பயன்பாட்டாளர்கள் இருப்பதே இந்நிறுவனங்களின் இந்த ஆர்வத்திற்கு காரணம்.
முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது பேசிய பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்ஆப் மூலம் இந்தியாவில் சிறிய கடைகள், வணிகங்களுடன் வர்த்தகம் செய்வது சிறப்பாக செயல்படுகிறது. இதே வழிமுறையை உலகின் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளார்.
அதோ போல் வேறு ஒரு கூட்டத்தில் பேசிய கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் 75 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் முதல்கட்டமாக தான் முதலில், 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.
Advertisement
Advertisement