இந்தியா

போட்டோவுடன் கூடிய மாஸ்க்.. கேரளா போட்டோகிராபருக்கு குவியும் ஆர்டர்கள்!

Summary:

Face mask with face at kerala

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதனால் வெளியில் செல்லும் அனைவருமே முகத்தில் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அனைவருமே மாஸ்க்குடன் வருவதால் சில சமயங்களில் எதிரில் வரும் நபர் யார் என்று அடையாளம் தெரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்ட கேரளா பேட்டோகிராபர் பினேஷ் என்பவர் புதிய வடிவிலான மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளார்.

இவர் கேரளா மாநிலம் கேட்டயம் அருகே இட்டுமண்ணூர் பகுதியை சேர்ந்தவர். மிக்கி மௌஸ், டோரா, சோட்டா பீம், டெடி பியர்ஸ், பிரபல நட்சத்திரங்கள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட மாஸ்க்குகளை பார்த்த இவர் அவரவர் உருவம் பொறித்த மாஸ்க்குகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

இதன் வெற்றியாக அவர் முதலில் அவரின் பாதி முகம் பொறித்த மாஸ்க்கினை தயாரித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் 1000 மாஸ்க்குகளை அதே போன்று தயாரித்துள்ளார். மேலும் தற்போது 5000 மாஸ்க்குகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement