ராஜீவ் காந்தியின் பாரத ரத்னா திரும்பப் பெறப்படுகிறதா? என்னதான் நடக்கிறது சட்டப்பேரவையில்!

ராஜீவ் காந்தியின் பாரத ரத்னா திரும்பப் பெறப்படுகிறதா? என்னதான் நடக்கிறது சட்டப்பேரவையில்!



ex - prime minister rajiv gandhi - bharatharathna

முன்னால் பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறுவது தொடர்பாக டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

கடந்த இரண்டு தினங்களாக தேசிய தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரண்டாம் நாள் கூட்டத்தில் சீக்கியா்கள் படுகொலை தொடா்பான தீா்மானம் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினா் ஜொ்னைல் சிங்கால் கொண்டு வரபட்டது.

அந்த தீா்மானத்தில், சீக்கிய கலவரம் தொடர்பாக அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத வேண்டும். மேலும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். 

delhi

தொடர்ந்து, சீக்கியா்களின் கலவரத்தை நியாயப்படுத்திய முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகள் இடம் பெற்றிருந்ததாகவும், இவை அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் ஆம் ஆத்மியின் உறுப்பினர் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தால் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி செய்தி தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ராஜீவ் காந்தி விவகாரம் தொடா்பாக எந்தவொரு தீா்மானமும் நிறைவேற்றப்படவில்லை. பேரவையில் இடம்பெற்றிருந்த உறுப்பினா் ஒருவா் தனக்கு வங்கப்பட்ட தீா்மான நகலில் அவரது கோாிக்கையை கையில் எழுதியிருந்தாா். அது தான் தற்போது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.