இந்தியா வீடியோ

போதையின் உச்சக்கட்டம்!. பசியில் உயிர்க்கோழியை பிடித்து திங்கும் இளைஞனின் வீடியோ!.

Summary:

போதையின் உச்சக்கட்டம்!. பசியில் உயிர்க்கோழியை பிடித்து திங்கும் இளைஞனின் வீடியோ!.


தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் உயிருடன் இருக்கும் கோழியை உணவாக கடித்து தின்ற வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபட் மாவட்டத்தில் மது அருந்திய இரண்டு இளைஞர்கள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, அதிகமான போதையின் காரணமாக சாலையோரம் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

அதில் சிறிது போதை தெளிந்து எழுந்த ஒரு இளைஞன் திடீரென அங்கு சென்று கொண்டிருந்த உயிர்க்கோழியை பிடித்து கடித்து உண்ண ஆரம்பித்துள்ளார்.அந்த வழியாக வரும்பொழுது இதனை பார்த்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, இதுகுறித்து காவல்துறையினர், மிருகவதை சட்டம் மற்றும் பொது இடத்தில் ஒழுங்கமற்ற நடத்தை போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

தற்போது வீடியோவில் இருக்கும் இரு இளைஞரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கான வேலைகளில் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement