வாவ்!! கொரோனாவுக்கு புது மருந்து!! தண்ணீரில் கலந்து அப்படியே குடிக்கலாம்!! முழு விவரம் இதோ!



DRDOs 2-DG drug for treatment of Covid patients

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவிலான கொரோனா மருந்தை டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) நாளை வெளியிடுகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் பலலட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவிலும் கொரோனாவின் தாக்கம் இதுவரை குறைந்தபாடில்லை. இன்றுவரை புது புது தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்தை டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) நாளை வெளியிடுகிறது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் ஆகியவற்றின் கலவையில் உருவாகியுள்ள இந்த மருந்ததை இந்தியாவின் டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) நிறுவனம் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கொரோனா மருந்தை தயாரித்துள்ளது.

முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும், பின்னர் சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்தின் சிறப்பம்சம் என்னவென்றால் மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.