ஆட்டம், பாட்டம் என நாய்களுக்கு நடந்த ஆடம்பர திருமணம்... வைரலாகும் வீடியோ!!



Dogs marriage video viral

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமான ஒன்று. அதில் மனிதர்கள் செய்யும் விசித்திர செயலும், இன்னும் சில மனிதர்கள் மிருகங்களை வைத்து செய்யும் விசித்திரச் செயலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆண் நாயான டாமிக்கும் பெண் நாயான ஜெய்லிக்கு மனிதர்களுக்கு எப்படி கோலாகலமாக திருமணம் செய்வார்களோ அதே போல் இரண்டு நாய்களுக்கும் கோலாகலமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். 

திருமண நிகழ்வில் உறவினர்கள் அனைவரும் இணைந்து நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நாய்களுக்கு நடந்த கோலாகல திருமணம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் நாய்களுக்கு இப்படி ஒரு கோலாகல திருமணமா என வியந்து வருகின்றனர்.