அடேங்கப்பா.. என்னவொரு பாசம்! சான்ஸே இல்லை! தன் முதலாளிக்காக இந்த நாய் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. என்னவொரு பாசம்! சான்ஸே இல்லை! தன் முதலாளிக்காக இந்த நாய் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!


dog-help-to-that-owner-video-viral

நாய்க்குட்டி ஒன்று இரும்பு கடை வைத்திருக்கும் தனது முதலாளி கஷ்டப்படுவதை கண்டு ஓடிச் சென்று உதவி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் மெய் மறந்து ரசிக்கும் வகையிலும் அதே நேரத்தில் இவையெல்லாம் இப்படியா! என ஆச்சரியமூட்டும் வகையிலும் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகளின் க்யூட்டான மற்றும் திறமைமிக்க வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பொதுவாகவே நாய் நன்றியுள்ளது என்பார்கள். தனக்கு ஒரு வேளை சோறு போட்டவர்களுக்காக அவர்கள் பின்னாடியே வாலாட்டியபடி சுற்றி நன்றியுடன் எதையும் செய்யும். அந்த வகையில் குட்டி நாய் ஒன்று தனது முதலாளிக்கு உதவி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் பழைய இரும்புக்கடைக்காரர் ஒருவர் நாய் ஒன்றை தனது கடையில் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

ஓனரின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த அந்த நாய் தனது எஜமான் பழைய இரும்பு சாமான்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருவதை கவனித்து, ஓடி சென்று தனது முன் இருகால்களால் அந்த வண்டியை தள்ளி அவருக்கு உதவி செய்துள்ளது. பார்ப்போரை நெகிழவைக்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.