இப்படியும் ஒரு டாக்டர்,...கரடியே காறி துப்புன மூவ்மெண்ட்..!

இப்படியும் ஒரு டாக்டர்,...கரடியே காறி துப்புன மூவ்மெண்ட்..!


doctor get life sentence for sexual harassment at rajastan

ராஜஸ்தான் மாநிலம், பண்டி மாவட்டம் டொல்டா கிராம பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் 2013 ஆம் ஆண்டு வெனிராம்  (30) என்பவர் மருத்துவர் பணியில் சேர்ந்தார். அப்போது, அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 13 வயது சிறுமிக்கு வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும், அந்த சிறுமிக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக டாக்டர் வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மருத்துவர் வெனிராம்  குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் வெனிராமை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு, பண்டி மாவட்டத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிறுமிக்கு டாக்டர் வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து குற்றவாளியான மருத்துவருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து  உத்தரவிட்டது.