அரசியல் தமிழகம் இந்தியா

என்னங்க வடிவேலு மாதிரி காமெடி பண்றாரு - அண்ணாமலையை கலாய்த்த திமுக எம்.பி.!

Summary:

என்னங்க வடிவேலு மாதிரி காமெடி பண்றாரு - அண்ணாமலையை கலாய்த்த திமுக எம்.பி.!

தமிழ்நாடு பாஜக தலைவருக்கு அரசியல் பக்குவமில்லை. அவர் வடிவேலை போல என்னை கைது செய், கைது செய்.. என காமெடி செய்து வருகிறார் என திமுக அமைப்பு செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.எஸ். பாரதி, "பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் என்பது இல்லை. அவர் பொறுப்புடன் பேச வேண்டும். திமுக என்ற இயக்கத்தை குற்றம் சாட்டி, தாக்கி பேசினால் பாஜகவில் பதவி கிடைக்கும் என்று இருக்கிறார். 

அவரை அனைத்து வழக்கிலும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தால், விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுப்பார்கள். அவர் எப்படி காவல் அதிகாரி ஆனாரோ?. அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என்று முடிவோடு இருக்கிறார். அனாவசியத்துடன் நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம். 

சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் கட்டாயம் அவர் சிறைக்கு செலவார். எனக்கும் - பி.வில்சனுக்கும் அறிவு உள்ளதா? என கேட்கிறார். எங்கள் இருவருக்கும் அண்ணாமலை சான்றிதழ் அளிக்க தேர்வையில்லை. யாருக்கு அறிவு உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். என்னை கைது செய்., கைது செய்... என வடிவேல் காமெடி காண்பிக்கிறார்" என்று கூறினார்.


Advertisement