அரசியல் இந்தியா சினிமா விளையாட்டு

தோனி அரசியலில் களமிறங்குகிறாரா? தோனியை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவனின் சர்ச்சை ட்வீட்!

Summary:

Dhoni politics about vignesh sivan

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த நாட்டை ஆளப்போகும் அந்த நாளை காண காத்திருப்பதாக தோனியை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

போடா போடி,  நானும் ரௌடி தான் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக விளங்குபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இயக்குநர் என்பதனை விட நடகை நயன்தாராவிற்கு நெருக்கமானவர் என்பதால் மிகவும் பிரபலமானார். இவரும் நயன்தாராவும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்றுள்ளனர். 

இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரும் ஆவார். இதனை அவரே பலமுறை கூறியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனுடைய ரோல் மாடல் தோனி தானாம். 

இந்நிலையில் தோனியை சந்திக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது எனக் கூறி தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில் "இவரைச் சந்திப்பதுதான் எனது வாழ்நாள் கனவு. இதுதான் என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான நாள். இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. இவர் இந்த நாட்டை வழிநடத்துப் போகும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்" என்று ட்விட்டரில்  குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் இன்ஸ்டாகிராமில் "தோனி மிகச்சிறந்த தலைவர்; இந்தியாவின் வருங்கால முதல்வர்" என்றும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தோனி தனது அரசியல் ஆசைப் பற்றி விக்னேஷிடம் எதுவும் தெரிவித்திருப்பாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தோனியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் களமிறக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இப்போதைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ள தோனி அரசியலுக்கு வந்தால் அவருக்கு இருக்கும் பொறுமை மற்றும் தலைமைப் பண்பிற்கு நிச்சயம் ஒரு நாள் பிரதமராக  முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. 


Advertisement