மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் செய்த காரியம்: அதிர்ச்சியில் உறைந்த கலெக்டர் ஆபீஸ்..!

மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் செய்த காரியம்: அதிர்ச்சியில் உறைந்த கலெக்டர் ஆபீஸ்..!


Desperately unable to find a girl for marriage, the young men marched to the District Collector's office in Mappillai Kolam and demanded Nuthana.

சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத இளைஞர்கள் விரக்தியில் மாப்பிள்ளை கோலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று நூதன கோரிக்கை வைத்தனர். 

மும்பையில் உள்ள சோலாப்பூரில் இளைஞர்கள் பலர்  மாப்பிள்ளை கோலத்தில் குதிரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி, பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏதோ திருமண விழா நடக்கப்போவதாக நினைத்தனர். ஆனால் இளைஞர்கள் நூதன போராட்டம் செய்தனர் என்பது பிறகு தான் அவர்களுக்கு தெரியவந்தது.

 மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண் கிடைக்கவில்லை என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு அரசே மணப்பெண்ணை பார்த்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஊர்வலத்தை, ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் பரஸ்கர் ஏற்பாடு செய்துள்ளார். அவர் கூறியதாவது:- மக்கள் எங்களது ஊர்வலத்தை பார்த்து கேலி செய்யலாம், ஆனால் உண்மை என்னவென்றால் மராட்டியத்தில் ஆண்- பெண் விகிதம் அதிக வித்தியாசத்தில் உள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. 

மராட்டியத்தில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் உள்ளது. இதனால், இளைஞர்களுக்கு திருமண வயதை அடைந்த பிறகும் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில்லை. இந்த பாலின வித்தியாசத்துக்கு பெண் சிசுக்கொலைகள் தான் முக்கிய காரணம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசு தான் காரணம். இதனால் கருவில் பாலினம் கண்டறியும் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அரசை வலியுறுத்தி இருக்கிறோம் என்று அவர் கூறினார்.