புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
துரோகம் செய்த காதலன்.. தீராத ஆத்திரம்.. மகனை கொன்று மெத்தைக்கு அடியில் போட்ட காதலி.!
தலைநகர் டெல்லியில் இந்திரபுரி பகுதியில் வசித்து வரும் ஜிதேந்தர் என்ற நபர் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது மனைவி மற்றும் மகன் இருவரையும் பிரிந்து கடந்த 2019 முதல் குமாரி எனும் இளம் பெண்ணுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். மூன்று ஆண்டுகளாக அவரிடம் குடும்பம் நடத்தி வந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்ய சொல்லி பூஜா குமாரி வற்புறுத்தி வந்ததனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஜிதேந்தர் மீண்டும் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.
இதில் பூஜா குமாரிக்கு ஆத்திரம் ஏற்பட்டதால் அவரை பழிவாங்க மகன் திவ்யன்ஷை கொலை செய்ய நினைத்துள்ளார். இதற்கு காரணம் அவர் முதல் மனைவியை பிரிந்து வராமல் ஜிதேந்தர் இருப்பதற்கு அந்த மகன்தான் காரணம் என்று எண்ணி உள்ளார். எனவே, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜிதேந்தர் வீட்டிற்கு சென்ற பூஜா குமாரி சிறுவன் திவ்யன்ஷை கொலை செய்து சிறுவனின் உடலை மெத்தைக்கு அடியில் துணிகள் வைக்கின்ற அறையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார்.
அறையை விட்டு மகன் வெளியில் வராததால் தேடி வந்த ஜிதேந்தர் மற்றும் அவருடைய மனைவி மகன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு பூஜா குமாரியை கைது செய்து விசாரித்தனர். அப்போது பூஜா குமாரி தன காதலனை பழிவாங்க சிறுவனை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார்.