இந்தியா

ஐயோ... 3 பெண்கள்.. நள்ளிரவில் கூட்டமாக வந்த ஆண்கள்.. சி.சி.டி.வியில் பரபரப்பு காட்சிகள்.!

Summary:

தலைநகரில் பெண்கள் ஆண்கள் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தலைநகரில் பெண்கள் ஆண்கள் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் பலாத்காரம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் பகுதியில், கடந்த மாதம் நவ. 19 ஆம் தேதி காரில் வந்த 3 பெண்கள், காரை விட்டு இறங்கி வெளியே காத்துகொண்டு இருந்தனர். 

இதன்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, பெண்களிடம் வாக்குவாதம் செய்து அவர்களை கைகளால் தாக்குகிறது. பின்னர், அவர்களின் காரில் வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து பெண்களை தாக்குகிறது. இது குறித்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.


Advertisement