காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன்! விபரீத தண்டனை கொடுத்த காதலி!

காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன்! விபரீத தண்டனை கொடுத்த காதலி!


Delhi girl attacked her lover with acid

பெண்கள் ஆண்களை காதலித்து ஏமாற்றுவது, பெண்கள் மீது ஆண்கள் ஆசிட் வீசுவது இதுபோன்ற செய்திகளை நாம் அதிகம் படித்திருப்போம். ஆனால், இங்கு வித்தியாசமாக காதலித்து ஏமாற்றியதாக காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு முகத்தில் காயங்களுடன் ஒரு இளைஞர் மற்றும் இளம் பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அவர்கள்மீது சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனனர். போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Crime

குறிப்பிட்ட இளைஞன் மற்றும் இளம் பெண் இருவரும் காதலித்ததாகவும், திருமணத்திற்கு அந்த இளைஞன் மறுத்ததால் அந்த பெண் அவர் மீது ஆசிட் வீசியதாகவும் கூறியுள்ளார். இதில், முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதியில் அந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இளம் பெண் ஒருவர் காதலித்த நபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.