வீடியோ: காவலர் சட்டையை பிடித்து, கன்னத்தில் அறைந்த நபர்!! காவல் நிலையத்தில் பரபரப்பு..

வீடியோ: காவலர் சட்டையை பிடித்து, கன்னத்தில் அறைந்த நபர்!! காவல் நிலையத்தில் பரபரப்பு..


Delhi Cop Beaten By Mob Inside Police Station viral video

டெல்லி காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட சம்பவமானது டெல்லியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோ பதிவில், சுமார் 10-12 பேர் கொண்ட குழு காவல்துறை அதிகாரி ஒருவரை சூழ்ந்து கொண்டு அவரை அடிப்பதை காட்டுகிறது, அதே நேரத்தில் அங்கிருந்த மற்றும் சிலர் இந்த சம்பவத்தை தங்கள் தொலைபேசியில் பதிவு செய்கின்றனர்.

கிழக்கு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், தாக்கப்பட்டவர் ஒரு தலைமை காவலர் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. அந்த வீடியோ பதிவில் காவலர் மன்னிப்பு கோரும் நிலையில், அந்த கும்பல் அவரை தொடர்ந்து தாக்குகிறது.

காவலர் ஏன் தாக்கப்பட்டார்? அவரை தாக்கிய கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவரும்நிலையில், சீருடையில் இருக்கும் காவலர் தாக்கப்படும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.