ஒமிக்ரானால் பேராபத்து.. உடனே இதை செய்யுங்கள்... டெல்லி முதல்வர் எச்சரிக்கை.!

ஒமிக்ரானால் பேராபத்து.. உடனே இதை செய்யுங்கள்... டெல்லி முதல்வர் எச்சரிக்கை.!



Delhi CM Letter to PM Narendra Modi about Ban International Arrival of Omicron Positive Countries

தென்னாபிரிக்க நாட்டில் பரவி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவிலான நாடுகள் மீண்டும் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கும் முடிவை எடுக்க தயாராகி வருகிறது. சில நாடுகள் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்துவிட்டது. 

தற்போது வரை 13 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவிட்டதாகவும் தெரியவந்துள்ள நிலையில், இந்தியாவில் இவ்வகை வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், மாநில அரசுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி அறிவுறுத்தியுள்ளது. 

arvind kejriwal

மத்திய அரசு உடனடியாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையினை நிறுத்த வேண்டும் என பலதரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வியை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுப்பியிருந்த கேள்வியில், "மத்திய அரசு ஏன் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானத்திற்கு தடை விதிக்கவில்லை" என்று எழுப்பப்பட்டு இருந்தது. 

மேலும், தற்போது பிரதமர் மோடிக்கு டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெளிநாடுகளுடன் கொண்ட விமான சேவையை நிறுத்த வேண்டும் எனவும் கடிதமும் எழுதியுள்ளார். அவ்வாறு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தும் பட்சத்தில், அது பேராபத்தில் சென்று சேரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.