பல நாள் கனவு! எல்லாம் நொடியில் சல்லி சல்லியா போச்சு! 27 லட்சம் கார் எலுமிச்சை பழம் மீது ஏற்றியப்போது நடந்த பகீர் சம்பவம்...



delhi-car-falls-during-lemon-ritual

புதிய கார் வாங்கிய மகிழ்ச்சி சில நிமிடங்களுக்குள் பெரும் கவலையாக மாறிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. பாரம்பரியமாக வாகனம் வாங்கியதும் பூஜை செய்து, எலுமிச்சம்பழத்தின் மீது ஏற்றும் வழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அந்த சடங்கு ஒரு குடும்பத்திற்கு எதிர்பாராத விபரீதமாக மாறியுள்ளது.

டெல்லி நிர்மான் விகார் பகுதியில் உள்ள மகேந்திரா கார் ஷோரூமில் மாணி பவார் என்ற பெண் தனது கணவர் பிரதீப்புடன் வந்து, முன்பதிவு செய்திருந்த மகேந்திரா தார் காரை பெற்றுக்கொண்டார். வழக்கம்போல பூஜை செய்து, டயரின் அடியில் எலுமிச்சம்பழங்களை வைத்து காரை ஸ்டார்ட் செய்தார். ஆனால், காரை மெதுவாக நகர்த்துவதற்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து முதல் மாடியிலிருந்தே கீழே விழுந்தது.ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த காரில் மாணி பவாரும், ஷோரூம் ஊழியர் விகாஷும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, ஏர்பேக் செயல்பட்டதால் இருவரும் பெரிய காயம் அடையாமல் தப்பினர்.

எனினும், ரூ.27 லட்சம் மதிப்புள்ள கார் கடுமையாக சேதமடைந்தது. ஷோரூமின் கீழே இருந்த சில பொருள்களும் சேதமடைந்துள்ளன.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: கள்ளக்காதலனால் கர்ப்பம்.. கலைக்கப்போன இடத்தில் அதிர்ச்சி.. பதறவைக்கும் சம்பவம்.!

புதிய கார் வாங்கிய மகிழ்ச்சி விபரீதமாக மாறியதால் மாணி பவார் மனமுடைந்துள்ளார். தற்போது பழுதுபார்க்க அனுப்பப்பட்ட அந்த கார், குடும்பத்தினரின் கனவுகளை சில நிமிடங்களில் சிதைத்து விட்டது.

இதையும் படிங்க: பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்ததாக கூறிய டாக்டர்! மறுநாள் உயிர் பிழைத்த அதிசய குழந்தை! அதிர்ச்சி சம்பவம்....