பள்ளி சீருடையில் சிக்கிய காதல் ஜோடி.. கதறவிட்ட இந்துத்துவா பெண்.. பரபரப்பு சம்பவம்.!

பள்ளி சீருடையில் சிக்கிய காதல் ஜோடி.. கதறவிட்ட இந்துத்துவா பெண்.. பரபரப்பு சம்பவம்.!


Delhi Bajrang Dal Party Supporters Harass Love Couple Feb 14

காதலர் தினம் பிப். 14 ஆம் தேதியான நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. காதல் வயப்பட்ட, வயப்படவிருந்த பல ஜோடிகளும், தங்களின் துணையுடன் காதலை பகிர்ந்துகொண்டு மகிழ்வித்தனர். இந்த நிலையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்க தள் அமைப்பினர் காதல் ஜோடியை அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த பெண்மணி காவித்துண்டு அணிந்துகொண்டு, பள்ளி சீருடையில் காதலருடன் இருந்த பெண்ணை எச்சரித்து, அவரது பெற்றோரை அழைத்து நேரில் வரும்படி மிரட்டி இருந்தார். பள்ளி சீருடையில் காதல் ஜோடி உலாவுகையில், அவர்கள் பஜ்ரங் தள அமைப்பினரிடம் சிக்கி பஞ்சாயத்து நடந்தது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

delhi

இதனைப்போல, நகரின் பல்வேறு இடங்களுக்கும் சென்ற பஜ்ரங் தள அமைப்பினர், கண்களில் பட்ட காதல் ஜோடிகளை விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பஜ்ரங் தள பொறுப்பாளர் தெரிவிக்கையில், "காதலர் தினம் மேற்கத்திய சீரழிவு கலாச்சாரம் ஆகும். இதனை அனுமதிக்க இயலாது. இவர்கள் பள்ளி சீருடையில் செய்வது காதலா?" என்று தெரிவித்தார். 

சமூக வலைத்தளத்தில் இதனைப்போல பல்வேறு விடியோக்கள் இளம் ஜோடிகளை துன்புறுத்துவதாக வைரலாகியுள்ள நிலையில், விடீயோவின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.