BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வகுப்பறையில் புகுந்து மாணவிகள் முன்னிலையில் நிர்வாணம், ஆபாச அத்துமீறல், சிறுநீர் கழித்து கொடுமை.. மாணவிகளுக்கு நடந்த பெருந்துயரம்.!
பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதி, கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தால் தொடக்கப்பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 5ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயின்று வரும் நிலையில், கடந்த 30ஆம் தேதி காலை பிரார்த்தனை முடிந்தபின் பிறகு மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், மாணவிகளின் ஆடைகளை உருவிய நிலையில், இரண்டு மாணவிகளை கட்டியணைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்த நிலையில், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் டெல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, அவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
அத்துடன் காவல்துறையினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவிகளை பொம்மையாக நினைத்து அவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்