இந்தியா

அப்பா ப்ளீஸ்.. கெஞ்சிய மகள்.. கண்டுக்கொள்ளாமல் பியானோ வாசித்த தந்தை.. நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம்..

Summary:

Daughter request his father, stop to play piyano

பெங்களூரில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருபவர் சப்டக் பேனர்ஜி. இவர் மென்பொறியியலாளராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் தனது 15 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் அதிக சத்தத்துடன் சப்டக் பேனர்ஜி பியானோ வசிக்க தொடங்கியுள்ளார். இரவில் சத்தம் அதிகமாக கேட்கவே அவரின் மகள் எழுந்து வந்து அப்பா ப்ளீஸ் சத்தத்தை குறைங்க என்று கூறியுள்ளார். ஆனால் சப்டக் பேனர்ஜி சத்தத்தை குறைக்காமல் தொடர்ந்து வாசித்துள்ளார்.

ஆனால் விடாமல் அவரது மகள் அக்கம்பக்கத்தினருக்கு தொந்தரவாக இருக்கும் சத்ததை குறைங்கப்பா என்று கெஞ்சியுள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்த வந்த மகளால் ஆத்திரமடைந்த சப்டக் பேனர்ஜி சமையலறைக்கு சென்று கத்தி எடுத்து வந்து மகளின் முதுகு, தோள்பட்டை மற்றும் கையில் காயப்படுத்தியுள்ளார்.

உடனே தன்னை தாக்கிய தந்தையை தடுத்து நிறுத்தி அவரை கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்த சப்டக் பேனர்ஜியின் மார்பு பகுதியில் கத்தி குத்தியுள்ளது. ஆனால் அதனை பார்க்காமல் அழுதவாறு தனது அறைக்கு சென்றுள்ளார் சப்டக்கின் மகள்.

அதனை தொடர்ந்து மீண்டும் பியானோ வாசிக்க தொடங்கியுள்ளார் சப்டக். இந்நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் சப்டக் பேனர்ஜியின் மகன் எழுந்து வந்த போது தந்தை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சப்டக் பேனர்ஜி இறந்த போது அளவுக்கு அதிகமாக மது அறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement