இந்தியா

தனது 100 வயது தாயை கட்டிலில் படுக்கவைத்து, வங்கிக்கு இழுத்துசென்ற 70 வயது மகள்! வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

Daughter bring mother to bank in cot for pension money

ஒடிசா மாநிலம் நுவபா மாவட்டம், பரகன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லபே பாகெல். 100 வயது நிறைந்த இவருக்கு வங்கி மூலம் மாதந்தோறும் பென்ஷன் பணம் ரூ.1,500 வழங்கப்பட்டு வந்தது. 
 இந்நிலையில் வயதாகி நடக்க முடியாததால், இந்த பணத்தை எடுப்பதற்காக, பாகெல் தனது 70 வயது மகளான கன்ஜா தேய் என்பவரை வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் பென்சன் பணத்தை அவரிடம் வழங்க மறுத்துள்ளனர். 

மேலும் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்தால் மட்டும்தான் பென்சனை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், கன்ஜா தேய் தனது  தாயாருக்கு வயதாகிவிட்டது. அவரை அழைத்து வர முடியாது என கூறியுள்ளார். அதனை வங்கி அதிகாரிகள் கேட்கவில்லை, மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வேறுவழியில்லாமல் கன்ஜா தேய், தனது தாயை கட்டிலில் படுக்கவைத்து, அவரே தனியாக வங்கிக்கு வீட்டிலிருந்து இழுத்துச் சென்றுள்ளார். பின்னரே அதிகாரிகள் பென்ஷன் பணத்தை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் வங்கி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement