பெரும் அதிர்ச்சி! பாஜக எம்பி மீது கற்களை வீசி முகம் முழுவதும் வழியும் ரத்தம்! உடை முழுவதும் இரத்தக்கரை! வைரலாகும் பரபரப்பு வீடியோ....



darjeeling-landslide-bjp-mp-attack

மேற்கு வங்கத்தின் மலைப்பகுதியான டார்ஜிலிங்கில் இயற்கை பேரழிவுக்கு பிந்தைய அதிர்ச்சிகரமான நிகழ்வு அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பாஜக எம்பி மீது நடந்த தாக்குதல் தற்போது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு – பலர் பலி

நேற்று டார்ஜிலிங் மாவட்டத்தின் சுகியா பொகாரி மற்றும் மிரிக் பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு இடத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து விதமான உதவிகளும் அரசால் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

பாஜக எம்பி மீது கற்கள் மழை

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய பாஜக எம்பி கஜென் முர்மு இன்று சென்றார். ஆய்வின் போது திடீரென சிலர் அவரை நோக்கி கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவர் முகத்தில் ரத்தக் காயங்களுடன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு! உத்தரகாண்ட் தாராலியில் குப்பைகள் போல் அடித்து செல்லப்பட்ட 50 கட்டிடங்கள்! 60 பேர் மாயமா? பீதியில் கூச்சலிடும் மக்கள்! பகீர் வீடியோ....

அரசியல் குற்றச்சாட்டு தீவிரம்

இந்த தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் காரணம் என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் கடுமையாக பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளனர்.

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட இயற்கை பேரழிவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் தாக்குதலும், மேற்கு வங்கத்தின் பாதுகாப்பு சூழல் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கான மத்திய மற்றும் மாநில அரசின் நடவடிக்கைகள் எதிர்கால அரசியல் நிலையை தீர்மானிக்கக் கூடும்.

 

இதையும் படிங்க: ஒரே கேலி, கிண்டல்! 20 தையல்.. ஆண் நண்பருடன் பேசியதால் 10-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பிளேடால் வெட்டிய மாணவிகள்! அதிர்ச்சி வீடியோ...