அடடா..!! சிறை கைதிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பா?.. மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி..!!

அடடா..!! சிறை கைதிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பா?.. மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி..!!


Damn!! Is this an opportunity for prison inmates?.. Allowed to spend 2 hours in a separate room with his wife..!!

பஞ்சாப், மனைவியுடன் தனி அறையில் இரண்டு மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி வழங்கும் சலுகையை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

பஞ்சாப் சிறைத்துறையின் இந்த முடிவு குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல்;- பஞ்சாப் சிறைகளில் இருக்கும் கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் இரண்டு மணி நேரம் செலவிட அனுமதி வழங்க சிறைத் துறை முடிவுவெடுத்துள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

நபா மாநகரில் இருக்கும் கோயிந்த்வால் மத்திய சிறைச்சாலை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை ஆகிய இரண்டு சிறைச்சாலைகளில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்படும். கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகராமான கைதிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.

சிறைகளில் நீண்ட காலமாக உள்ள நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கே இந்த சலுகை அளிக்கப்படும். அதன்படி, சிறை வளாகத்தில் இருக்கும் குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது மனைவி அல்லது கணவருடன் இரண்டு மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கபடும். இதன்மூலம், சிறைக் கைதிகளிடம் நன்னடத்தை அதிகரிக்கும். அதோடு, அவர்களின் திருமண பந்தமும் வலுப்படும். இந்த அனுமதி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

இந்தியாவில் சிறைக் கைதிகளுக்கு இந்த சலுகையை வழங்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என அந்த அதிகாரி கூறியிருந்தார்.