இந்தியா

7 யானைகள் மின்சாரம் தாக்கி பலி; வெளியான அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

current shock - 7 elephants died

ஒரிசாவில் 7 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக காட்டு யானைகள் தொடர்ந்து பலியாகி வருவது வேதனைக்குரியது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிள்ளையை காப்பாற்ற முயன்ற தாய் யானையும் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து இன்று, மின்சாரம் தாக்கி 7 காட்டு யானைகள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம் கமலங்கா என்ற ஊரில் மின்சாரம் தாக்கி 7 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானைகள் பலியானது குறித்த அடுத்த கட்ட விசாரணையை  மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement