#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
கொடூரத்தின் உச்சம்... துண்டு துண்டாக மீட்கப்பட்ட பெண் உடல்... கொலைக்குப் பின்னணியில் யார்.?.. காவல்துறையினர் தீவிர விசாரணை.!
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாலத்திற்கு அடியில் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கொலையாளியை தேடி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள பாலத்திற்கு அடியில் பெண் உடல் பாகங்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாலத்திற்கு அடியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வீசப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தலைப்பகுதியும் அங்கேயே கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து உடல் பாகங்கள் மற்றும் தலையை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்தப் பெண் யார் எதற்காக கொல்லப்பட்டார் அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற பல கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.