இந்தியா Covid-19

ஒரே பட்டாலியனை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 122 பேருக்கு கொரோனா!

Summary:

Crpf affected by corona

டெல்லி மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் (சிஆர்பிஎப்) கடந்த இரு வாரங்களில் 122 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட  வீரர்களின் பரிசோதனை முடிவுகள் சில நாட்களில் வரவுள்ளநிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

டெல்லி மயூர் விஹார் பகுதி மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து படைப்பிரில் இருந்த மற்றவர்கள் தனிமைபடுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.  ஏற்கனவே 54 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 68 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஒட்டுமொத்தமாக 122 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவர் குணமடைந்துள்ளார். ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Advertisement