இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பீதி! பொதுத்தேர்விற்கு வரும் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி விடுத்த அவசர அறிவிப்பு!

Summary:

cpsc allow mask while public exam time

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90000க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள்  இதனால் இந்திய மக்கள் அனைவரும் பெரும் பீதியில் உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தியகுடியரசு மாளிகையில் திட்டமிடப்பட்டிருந்த ஹோலிப்பண்டிகை நிகழ்ச்சிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நேரத்தின் போது மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர அனுமதி - சிபிஎஸ்இ

இதனிடையே சிபிஎஸ்இ தேர்வு இயக்குனரகம் சிபிஎஸ்இ தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் மாஸ்க் அணிந்து கொள்ளலாம்,ஹேண்ட்  சானிடைசர்களை கொண்டுவரலாம். இதெல்லாம் அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது. இதற்கு எந்தவித இடையூறு செய்ய மாட்டோம் என இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் இருமல், தும்மல் வந்தால் மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளி, பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
 


Advertisement