இந்தியா சமூகம்

மெட்ரோ ஸ்டேஷனில் இளம் ஜோடிகளின் லீலைகள்! லீக்கான வீடியோவால் பரபரப்பு

Summary:

Couples in metro rail leaked video

ஹைதராபாத்தில் இயங்கி வரும் மெட்ரோ ஸ்டேஷனை இளம் ஜோடிகள் தங்களது லீலைகளை அரங்கேற்ற பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

மெட்ரோ ஸ்டேஷனில் முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு வசதியாக தானியங்கி இயந்திரங்கள் பயன்படுதப்படுகின்றன. ஆனால் இந்த வசதியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது காதல் லீலைகளை அரங்கேற்ற பயன்படுத்தியுள்ளனர். 

யாரும் ஆட்கள் இல்லாத சமயங்களை சாதகமாக பயன்படுத்தி அந்த இளம் ஜோடிகள் செய்த காதல் லீலைகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறையில் சேமிக்கப்படும் இந்த வீடியோக்கள் தற்போது லீக்காகி உள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இப்படி செய்தது மிகப்பெரிய குற்றமாகும். அதைவிட குற்றம் இந்த வீடியோக்களை வெளியில் கசியவிட்ட மெட்ரோ ரயில் அதிகாரிகளின் செயல். 

இதுகுறித்து மெட்ரோ ரயில் உயரதிகாரி தெரிவிக்கையில் 'இந்த அசம்பாவித செயல்களை செய்துள்ள இளம்ஜோடிகள் மற்றும் இந்த வீடியோக்களை கசியவிட்ட ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


Advertisement