இந்தியா

கொட்டும் மழையில்,சாலை ஓரத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழையில் கிடந்த கொரோனா நோயாளியின் உடல்..! பதறவைக்கும் சம்பவம்.!

Summary:

corono patient dead body left in rain for 3 hours in Bangalore

ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்த முதியவர் ஒருவரின் உடல் மூன்று மணிநேரம் கொட்டும் மலையில், சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஹனுமந்தா நகரில் வசித்துவந்த 63 வயது முதியவர் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக அந்த முதியவர் சாலை ஓரத்திற்கு கொண்டுவரப்பட்டு, சாலை ஓரத்தில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் அதிகமாகி மயங்கி விழுந்துள்ளார்.

சிறிது நேரத்தில்அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து மழை பெய்ய தொடங்கிய நிலையில் முதியவரின் உடல் மூன்றுமணிநேரம் கொட்டும் மழையில் கிடந்துள்ளது. 3 மணிநேரத்திற்கு பிறகே ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து முதியவரின் உடலை எடுத்துச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள முதியவரின் குடும்பத்தினர் நீண்ட நேரமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தொடர்புகொண்டதாகவும், யாரும் பதிலளிக்கவில்லை என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement