இந்தியாவில் உயரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்!

இந்தியாவில் உயரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்!


corono-affected-people-counts-in-india-SQZ72R

சீனாவில் வுஹான் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட பல நாடுகளிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது .இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1 லட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா  பரவுவதை தடுக்க பல நாடுகளிலும்   ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகளும் திணறி வருகின்றது.

India

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி 12,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1076 பேருக்கு கொரோனா உறுதி  செய்யபட்டுள்ளது. அதேபோல், 32பேர் உயிரிழந்து கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,766 ஆக உள்ளது.